காரைதீவு பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்களின் நேரடி கவனத்திற்கு..!
தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் வெள்ளநீர் தேங்கும் பிரதேசங்கள் மற்றும் பிரச்சினை ஏற்படும் நிலையில், காரைதீவு,மாவடிப்பள்ளியில் உள்ளக வடிகால்களில் ஏற்படும் தடைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணிகளை துரித படுத்துவதோடு பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கனரக வாகனத்தின் உதவியுடன் அவசரமாக முன்னெடுக்கப்படல் வேண்டும் அப் பிரதேச பொது மக்களின் பணிவான வேண்டும்கோள்.
தொடர்ந்தும் இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் டெங்கு நுளம்புகள் நோயிக்கு உள்ளாக படுவதற்கு வாய்ப்புகளும் அதிகம்
அத்தோடு காரைதீவு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி நகர் பகுதியில் பராமரிப்பின்றி கைவிடப்பட்ட காணிகளின் காரணமாக டெங்கு நோய் வேகமாக பரவி வருவதாக அங்குள்ள பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.



