மண்சரிவு அபாயம்: 14 மாவட்டங்களில் 15,000 குடும்பங்கள் பாதிப்பு
14 மாவட்டங்களில் உள்ள 15,000 குடும்பங்கள் அதிக ஆபத்துள்ள மண்சரிவு மண்டலங்களில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் (NBRO) மண்சரிவு ஆராய்ச்சி மற்றும் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் காமினி ஜெயதிஸ்ஸ அவர்கள், இக்குடும்பங்களில் 2,500 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வழிநடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

