லண்டனில் ரில்வின் சில்வாவுக்கு எதிர்ப்பு: கூட்ட மண்டபத்திற்கு வெளியே போராட்டம் – பரபரப்பில் அல்பேட்டன்!

லண்டனில் ரில்வின் சில்வாவுக்கு எதிர்ப்பு: கூட்ட மண்டபத்திற்கு வெளியே போராட்டம் – பரபரப்பில் அல்பேட்டன்!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) முதுகெலும்பாகத் திகழும் ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா லண்டனில் கலந்துகொள்ளும் நிகழ்வுக்கு எதிராகக் கடும் எதிர்ப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

இன்று (23) பிற்பகல் 2 மணியளவில் லண்டன், அல்பேட்டன் (Alperton) பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் புலம் பெயர் இலங்கையர்களைச் சந்திக்கும் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எதிர்ப்பது ஏன்? இந்த நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு வெளியே, பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு (BTCC) எதிர்ப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

🛑அண்மையில் திருகோணமலையில் புத்தர் சிலை விவகாரத்தில் அரசாங்கம் பௌத்த கடும்போக்குவாதிகளுக்குச் சாதகமாகச் செயற்பட்டமை.

🛑ஜே.வி.பி.யின் நீண்டகால தமிழர் விரோதப் போக்கு.
ஆகியவற்றைக் கண்டித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த மாதம் இதே இடத்தில் அமைச்சர்கள் சிலர் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றிருந்தது. இந்நிலையில், மாவீரர் நாள் (நவம்பர் 27) நெருங்கும் இவ்வேளையில், ஆளுங்கட்சியின் முக்கிய புள்ளிக்கு எதிராக லண்டனில் போராட்டம் முன்னெடுக்கப்படுவது அரசியல் வட்டாரத்தில் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.

Recommended For You

About the Author: admin