கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு: ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் உதவியாளர் சிக்கினார்!
கொட்டாஞ்சேனை பகுதியில் நபரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் (CCD) ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்துள்ளனர்.
கடந்த 7ஆம் திகதி காரில் வந்த துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், கொலையாளிக்கும் அவர் பயன்படுத்திய துப்பாக்கிக்கும் போக்குவரவு வசதி அளித்து உதவிய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வத்தளைப் பகுதியைச் சேர்ந்த 27 வயதான இந்த சந்தேகநபரைக் கைது செய்யும் போது, அவரிடமிருந்து 8 கிராம் 450 மில்லி கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது சந்தேகநபர் 72 மணிநேர தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்.

