வட மாகாண முதலீட்டாளர் மாநாட்டை நடாத்துவதற்கான மாவட்ட ரீதியான முன்னாயத்த கலந்துரையாடல்…!

வட மாகாண முதலீட்டாளர் மாநாட்டை நடாத்துவதற்கான மாவட்ட ரீதியான முன்னாயத்த கலந்துரையாடல்…!

அரச திணைக்களங்களின் ஆதரவுடன்

வட மாகாண முதலீட்டாளர் மாநாட்டை அடுத்த ஆண்டு தை மாதத்தில் நடத்துவதற்கான வட மாகாண மாவட்ட ரீதியான முன்னாயத்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் S.முரளிதரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

 

இலங்கை மனேஜ்மன்ட் க்ளப் (The Management Club of Sri Lanka) தலைவர் திரு. கௌஷால் இந்திர ராஜபக்ஷ, மற்றும் தேசிய தொழிற் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் (NEDA) தலைவர் திரு. லக்ஷ்மன் அபயசேகர ஆகியோரின் பங்குபற்றுதலுடன் மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம் (18.11.2025)காலை 9.00 மணிக்கு நடைபெற்றது.

 

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நளாஜினி இன்பராஜ், திட்டமிடல் பணிப்பாளர் ச.மோகனபவன்,மாவட்ட விவசாய பணிப்பாளர்,கரைச்சி,பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர்கள்,பிரதி ஆணையாளர் கமநல அபிவிருத்தி திணைக்களம்,பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரதித்திட்டமிடல் பணிப்பாளர்,பிரதி விவசாய பணிப்பாளர்,பிரதி பணிப்பாளர் கால்நடை சுகாதார திணைக்களம்,தேசிய தொழில் முயற்சி அதிகார சபைத் தலைவர் லக்ஸ்மன் அபயசேகர, வடக்கு மாகாண முதலீட்டாளர் மாநாட்டுக்கான இணைத் தலைவரும் த மனேஜ்மன்ட் க்ளப் முகாமைத்துவ சபையின் துணைத் தலைவர் – நிதி சமிந்த ஹூலங்கமுவ, த மனேஜ்மன்ட் க்ளப் முகாமைத்துவ சபையின் துணைத் தலைவர் – நிர்வாகம் சாந்தி பகீரதன், த மனேஜ்மன்ட் க்ளப் முகாமைத்துவ சபையின் முன்னாள் தலைவர் தீபால் அபயசேகர ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் மற்றும் விடயத்தோடு தொடர்புடைய திணைக்களத் தலைவர்கள்,வடக்கு மாகாண முதலீட்டாளர் மாநாட்டுக்கான பங்காளர்களான ஹற்றன் நஷனல் வங்கியின் பிரதிநிதிகளும் மாவட்டச்செயலக பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

 

ஜனவரி மாதம் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் இலங்கை முதலீட்டு சபை, ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, தேசிய ஏற்றுமதியாளர்கள் சபை, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் உள்ளிட்ட திணைக்களங்களின் ஆதரவுடன் இம் மாநாட்டினை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

வடக்கு மாகாணத்தின் 05 மாவட்டங்களையும் உள்ளடக்கி உள்நாட்டு சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்த்து, முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குவதற்கான சந்தர்ப்பமாக இம் மாநாடு அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin