சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பத்திநாயக்கவுக்கு எதிராக ஒழுக்காற்று..!
பொலிஸ் நிர்வாகப் பிரிவுக்குப் பொறுப்பான பதில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராகச் செயற்பட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் பத்திநாயக்க, ஒழுக்காற்று நடவடிக்கையின் கீழ் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் லலித் பத்திநாயக்க மத்திய மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவியில் தொடர்ந்தும் பணியாற்றவுள்ளார்.
அவர் நீக்கப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்காக, பொலிஸ் நிர்வாகப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவிக்கு, மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரத்னவை நியமிப்பதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது.
பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய வெளிநாட்டுப் பயணத்தில் இருப்பதால், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன தற்போது பதில் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

