இலங்கை வந்தடைத்த திருமாவளவன்..!

இலங்கை வந்தடைத்த திருமாவளவன்..!

இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவன் இன்று (13) யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் ஊடாக இலங்கை வந்தடைத்துள்ளார்.

வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் நடத்தவுள்ள ‘கார்த்திகை வாசம்’ மலர்க் கண்காட்சியில் கலந்துக் கொள்வதற்காக அவர் இலங்கை வந்தடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நிகழ்வானது நல்லூர் கிட்டு பூங்காவில் (சங்கிலியன் பூங்கா) நாளை (14) ஆரம்பமாகி 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

அத்தோடு தொல்.திருமாவளவன் இன்று முள்ளிவாய்க்காலுக்கும் சென்று அஞ்சலி செலுத்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin