அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்குள் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என வீடமைப்பு பிரதியமைச்சர் டீ.பி.சரத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் இடம்பெயர்ந்துள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்குள் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என வீடமைப்பு பிரதியமைச்சர் டீ.பி.சரத் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2,445 வீடுகளை நிர்மாணிக்க இந்த ஆண்டு 3.8 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வீடொன்றுக்கு தலா 15 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இது மற்ற பிரதேசங்களில் வழங்கப்படும் ரூ.10 லட்சம் தொகையை விட அதிகமாகும்

இந்த ஆண்டு யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் ஆகிய பிரதேசங்களில் 1,900-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த 3-4 ஆண்டுகளுக்குள் யாழ்ப்பாண குடாநாட்டில் இடம்பெயர்ந்த ஒவ்வொரு குடும்பத்துக்கும் வீடுகளை கட்டி முடிக்கும் பணி நிறைவு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin