க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம் : கிளிநொச்சி மாவட்டத்தில் 2,253 பரீட்சார்த்திகள் தகுதி..!
நாடளாவிய ரீதியாக 2025ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று(10.11.2025) ஆரம்பமானது.
இப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 05ம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்த ஆண்டு குறித்த பரீட்சைக்காக கிளிநொச்சி மாவட்டத்தில் 2,253 பரீட்சார்த்திகள் தகுதி பெற்றுள்ளனர்.
இதற்காக கிளிநொச்சி மாவட்டத்தில் 17 பரீட்சை நிலையங்களும், 09 ஒருங்கிணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.


