இட்டு நிரப்பிட முடியாத மாமனிதம்..!
19 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாள் காலை கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார் மாமனிதர் ரவிராஜ்.
அன்றைய நாள் தெரன தொலைக்காட்சியில் நடைபெற்ற பேட்டியை நானும் நேரடியாக பார்த்தேன், அருமையா பல விடயங்களை தெளிவாக பயப்பிடாமல் சிங்கள மக்களுக்கு புரியும்படி சிரிச்சுக்கொண்டு சிங்கள மொழியில் பதில் கூறினார்.
மாமனிதர் ரவிராஜ் 2006 ஆண்டு நவம்பர் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று காலை 7:00 மணிக்கு ரவிராஜ் தெரன தொலைக்காட்சியில் நடந்த ஒரு நேரடி நேர்காணல் ஒன்றில் பங்குபற்றிவிட்டு வீடு திரும்பி பின்னர் மீண்டும் வீட்டை விட்டு தனது வாகனத்தில் வெளியேறிய போது காலை 8:45 மணியளவில் கொழும்பு நாரகேன்பிட்டிய மனிங்டவுனில் உள்ள அவரது வீட்டுக்கருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த இரண்டு இனந்தெரியாதோரால் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவிராஜ் சிகிச்சை பலனின்றி காலை 9.20 மணிக்கு உயிரிழந்தார்.

