தவறுக்கு வருந்துகின்றேன்:செல்வம் அடைக்கல நாதன்.!

தவறுக்கு வருந்துகின்றேன்:செல்வம் அடைக்கல நாதன்.!

தன் மீதான பெண் விவகார குற்றச்சாட்டை செல்வம் அடைக்கலநாதன் ஏற்றுக்கொண்டார். “ஒரு தவறொன்று நடந்து விட்டது. நானும் அவசரப்பட்டு கதைத்து விட்டேன்“ என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

(9) வவுனியாவில் நடந்த தலைமைக்குழு கூட்டத்தில், அவர் உடனடியாக தலைமை பதவியிலிருந்து விலக வேண்டுமென உறுப்பினர்கள் ஒரு பகுதியினர் கடுமையாக வலியுறுத்திய நிலையில், ஜனவரி மாதம் பதவிவிலகுவதாக அவகாசம் கோரினார்.

இன்றைய தலைமைக்குழு கூட்டம் வவுனியா நெல்லி ஹொட்டலில் நடந்தது.

கூட்டத்துக்கு செல்வம் அடைக்கலநாதன் தலைமை தாங்க முயன்ற போது, உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இன்றைய நிகழ்ச்சி நிரலில், செல்வம் அடைக்கலநாதன் மீதான பெண் விவகார ஒலிப்பதிவு குற்றச்சாட்டு, குறித்து விவாதிப்பதாக இருந்தது.

இதனால் சலசலப்பு ஏற்பட, கூட்டத்தை தலைமை தாங்குவதிலிருந்து செல்வம் அடைக்கலநாதன் விலகிக் கொண்டார். உபதலைவர் ஹென்றி மகேந்திரன் தலைமையில் கூட்டம் நடந்தது.

Recommended For You

About the Author: admin