தலதா மாளிகையின் தியவதன நிலமேயாக பிரதீப் நிலங்க தேரர் மீண்டும் தெரிவு..!
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமே பதவிக்கு மீண்டும் ஒருமுறை பிரதீப் நிலங்க தேல தேரர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேயைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு இன்று (07) பிற்பகல் கண்டி பௌத்த மண்டபத்தில் நடைபெற்றது.
இதில், பிரதீப் நிலங்க தேல 195 வாக்குகளைப் பெற்று, மூன்றாவது முறையாக 10 வருட காலத்திற்குத் தியவதன நிலமேயாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

