முல்லைத்தீவில் மாணவிகளுடன் அத்துமீறல் – ஆசிரியர் பணிநீக்கம் !
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவிகளுடன் தவறாக நடக்க முற்பட்ட ஆசிரியர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (04) பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த ஆசிரியர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இவ்வாறு மாணவிகளுடன் தவறாக நடக்க முற்பட்ட நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
அந்தவகையில் விசாரணைகளின் முடிவில் அவர் செவ்வாய்க்கிழமை (04) பணி நீக்கம் செய்யப்பட்டார்.

