தொல்பொருள் சுவடு சேதம்: பிரதேச சபை தவிசாளர் உட்பட இருவர் கைது, பிணையில் விடுதலை
நெடுந்தீவில் (Neduntheevu) தொல்பொருள் சின்னமாக அடையாளப்படுத்தப்பட்டிருந்த பகுதியை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் (தலைவர்) மற்றும் ஒரு ஒப்பந்ததாரர் ஆகியோரை யாழ் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸார் இன்று கைது செய்தனர்.
வெடியரசன் கோட்டை வீதி புனரமைப்புப் பணியின்போது இந்தச் சேதம் ஏற்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக முன்னதாக நேற்று முன்தினம் இரு சாரதிகள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட தவிசாளர் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் இன்று மாலை ஊர்காவற்றுறை (Kayts) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். சந்தேகநபர்கள் இருவரும் தலா ஒரு இலட்சம் ரூபா பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்து உத்தரவிட்டது.

