விபுலானந்தர் பிறந்த மண்ணான காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா -2025 

விபுலானந்தர் பிறந்த மண்ணான காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா -2025

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்த மண்ணான கிழக்கு மாகாண, காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா காரைதீவு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் கே. சுதர்சனின் நெறிப்படுத்தலில் காரைதீவு பிரதேச செயலாளர் பொறியியலாளர் ஜீ. அருணன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (04) நடைபெற்றது.

 

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் காரைதீவு பிரதேச செயலகம் ஏற்பாடு செய்து நடத்திய இந்த கலாச்சார விழாவில் காரைதீவு, மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி பிரதேச கலைஞர்கள், இந்த பிரதேசங்களை சேர்ந்த பாடசாலைகளின் மாணவர்கள் கலந்து கொண்டு பல்லின கலை, இலக்கிய, கலாசார நிகழ்ச்சிகளை வழங்கினர்.

 

இதன்போது பிரதேச கலாசார போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியீட்டியவர்களுக்கான சான்றிதழ்கள், பரிசுகள், நினைவு சின்னங்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.

 

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் டீ.எம். றிம்ஸான், காரைதீவு பிரதேச உதவி பிரதேச செயலாளர் எஸ். பிரணவ ரூபன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் பி. ராஜகுலேந்திரன், மேலதிக மாவட்ட பதிவாளர் திருமதி ஆர். சஜிந்தா உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கலாசார உத்தியோகத்தர்கள், பாடசாலை ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

 

Recommended For You

About the Author: admin