சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்தின் புதிய தலைவராக கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி தெரிவு செய்யப்பட்டார்..!
சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் நேற்று காலை (02/11/2025) 10 மணியளவில் சாவகச்சேரி சிவன்கோவில் வீதியில் அமைந்துள்ள தென்மராட்சி கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
இக் கூட்டத்திற்கு அதிதிகளாக சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் க,ஜெயரூபன் மற்றும் வகச்சேரி நகர் கிரமாசேவகர் ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் இடம்பெற்றது இதன் போது கடந்த மூன்று ஆண்டுகளுக்கான நிர்வாக செயற்பாட்டறிக்கையும் கணக்கறிக்கையும் வாசிக்கப்பட்டது இதன் போது கணக்கறிக்கை மூன்று ஆண்டுகளும் சேர்த்து செய்யப்பட்டுள்ளமையால் போதிய விளக்கம் இல்லாது உள்ளதால் கணக்கறிக்கை ஒவ்வெறு ஆண்டும் தனித்தனியாக வழங்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு புதிய நிர்வாகத்தெரிவு இடம்பெற்றது.
இதன்போது, தலைவராக தொழிலதிபர் அகிலன் முத்துக்குமாரசாமி,
செயலாளராக முத்துலிங்கம் கோகுலன், பொருளாளராக மருதை உதயகுமார் மற்றும் 10 நிர்வாகசபை உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.

