கிளிநொச்சியில் இராணுவத்தின் வசம் இருந்த 1.5 ஏக்கர் தனியார் காணி விடுவிப்பு!

கிளிநொச்சியில் இராணுவத்தின் வசம் இருந்த 1.5 ஏக்கர் தனியார் காணி விடுவிப்பு!

​கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பரந்தன் பகுதியில் இலங்கை இராணுவத்தின் வசம் இருந்த 1.5 ஏக்கர் தனியார் காணி இன்று (29) உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளது.

​காணி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில், இராணுவத்தினரால் உத்தியோகபூர்வமான காணி விடுவிப்பு ஆவணங்கள் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் எஸ். முரளிதரனிடம் கையளிக்கப்பட்டது.

 

​இந்த நிகழ்வில் கண்டாவளைப் பிரதேச செயலாளர் டி. பிருந்தாகரன் மற்றும் பல அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: admin