முழங்காவில் மகாவித்தியாலய மாணவர்களுக்கு போசாக்கு தொடர்பான கருத்தமர்வு..!
சுன்னாகம் பாரம்பரிய ரோட்டரிக் கழகமும்-சென்னை லெஜென்ஸ் ரோட்டரிக் கழகமும் இணைந்து இன்றைய தினம்( 29.10.2025) புதன்கிழமை கிளிநொச்சி முழங்காவில் மகா வித்தியாலய மாணவர்களுக்கான கருத்தமர்வு ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது மாணவர்களுக்கு போஷாக்கு ,மன வலிமை மற்றும் உடற்பயிற்சி தொடர்பாக பயிற்சி வழங்கப்பட்டிருந்தது.செயலமர்வினை கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையைச் சேர்ந்த பொதுச்சுகாதாரப் பரிசோதகர் முன்னெடுத்திருந்தார்.


