இஷாராவுக்கு உதவிய பெண் சட்டத்தரணி கைது..!
கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்வதற்காக, இஷாரா செவ்வந்திக்கு, பிஸ்டல் துப்பாக்கியை மறைத்துக் கொள்வதற்காக ‘தண்டனைச் சட்டக்கோவை’ நூலின் பிரதியொன்றை வழங்கிய பெண் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சட்டத்தரணி கடவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

