தெற்காசிய சிரேஸ்ட தடகள சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு 2ஆம் இடம் – 20 தங்கப் பதக்கங்களை வென்ற இந்தியா முன்னிலை

தெற்காசிய சிரேஸ்ட தடகள சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு 2ஆம் இடம் – 20 தங்கப் பதக்கங்களை வென்ற இந்தியா முன்னிலை

இந்தியாவின் ராஞ்சியில் நேற்று (26) முடிவடைந்த தெற்காசிய சிரேஸ்ட தடகள சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

பல போட்டிகளில் இந்தியாவுடன் போட்டியிட்ட இலங்கை, பதக்கப் பட்டியலில் 4 தங்கப் பதக்கங்கள் வித்தியாசத்தில் முதலாம் இடத்தை இழந்தது.

இலங்கை 16 தங்கம், 14 வெள்ளி மற்றும் 10 வெண்கலத்துடன் 40 பதக்கங்களை வென்றது.

20 தங்கப் பதக்கங்களை வென்ற இந்தியா, பதக்கப் பட்டியலில் முன்னிலை பெற்றதுடன், 20 வெள்ளி மற்றும் 18 வெண்கலப் பதக்கங்களையும் வென்றது.

இருப்பினும், இலங்கை மற்றும் இந்தியாவைத் தவிர, வேறு எந்த நாடும் தங்கப் பதக்கத்தை வெல்லவில்லை.

குறிப்பாக, 02 வெள்ளிப் பதக்கங்களை வென்ற நேபாளத்தைத் தவிர, வேறு எந்த நாடும் வெள்ளிப் பதக்கத்தை ஏனும் வெல்லவில்லை

பங்களாதேஷ் 3 வெண்கலப் பதக்கங்களையும், மாலைத்தீவு 1 வெண்கலப் பதக்கத்தையும் வென்ற போதும், பூட்டான் ஒரு பதக்கத்தையும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 60 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

போட்டியை நடத்திய இந்தியா மற்றும் இலங்கையைத் தவிர, பூட்டான், நேபாளம், மாலைத்தீவு மற்றும் பங்களாதேஷை பிரதிநிதித்துவப்படுத்திய விளையாட்டு வீரர்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.

Recommended For You

About the Author: admin