“அஸ்வெசும” முதற் கட்ட தகவல்களை உறுதிப்படுத்தும் செயற்பாட்டிற்கான பயிற்சி செயலமர்வு..!
கிளிநொச்சி மாவட்டத்தில்”அஸ்வெசும” முதற் கட்ட தகவல்களை உறுதிப்படுத்தும் செயற்பாட்டிற்கான பயிற்சி செயலமர்வு இன்று(27.10.2025) திங்கட்கிழமை நடைபெற்றது.
குறித்த செயலமர்வு கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில், நலன்புரி நன்மைகள் சபையின் ஏற்பாட்டில் காலை9.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்கள் கலந்து கொண்டு குறித்த செயலமர்வினை ஆரம்பித்து வைத்தார்.
மீளவும் தகவல்களை சான்றுப்படுத்தும் கட்டத்தின் கீழ், தகவல் சேகரிப்பு மற்றும் எண்ணீட்டு அலுவலர்களுக்கான பயிற்சி செயலமர்வாக இது நடைபெற்றது.
இதன் வளவாளராக நலன்புரி நன்மைகள் சபையின் மென்பொருள் பொறியியலாளர் சுரேஸ் கலந்து கொண்டிருந்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட செயலக பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், உதவி மாவட்ட செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், நலன்புரி நன்மைகள் சபையின் மாவட்ட ஒருங்கிணைப்ப்பாளர் மற்றும் விடைய உத்தியோகத்தர்கள், புள்ளிவிபர உத்தியோகத்தர்கள், நிர்வாக கிராம உத்தியோகத்தர்கள், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், கணக்கெடுப்பு உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


