இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளால் நடு வீதியில் நிற்கும் பொது மக்கள்..!

அன்மை காலமாக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளின் செயற்பாட்டால் மக்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தையும் பாதிப்புக்களை யும் ஏற்படுத்தியுள்ளது

அதன் தொடர்ச்சியாக நேற்றைய முன் தினம் 19 ஞாயிற்றுக்கிழமை இரவு 10 30 மணியளவில் கொழும்பு புறக்கோட்டை பேருந்து தரிப்பிடத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ND 9933 பேருந்து ஆசன முன் பதிவு செய்த பொது மக்களை நடு வீதியில் நிற்க வைத்து சென்றமை மக்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்வதற்காக நேற்றைய தினம் இரவு மூன்றுக்கு மேற்பட்ட பொதுமக்களை நீர்கொழும்பு வயிக்கால பகுதியில் இருந்து 36,37,40 போன்ற ஆசனங்களை முன் பதிவு செய்து விட்டு பேரூந்துக்காக கார்த்திருந்து உள்ளனர்

காத்திருந்த நபர்களுக்கு 11:45 மணியளவில் குறித்த பிரதேசத்திற்கு பேரூந்து வருகை தரும் என நடத்துனரால் கூறப்பட்ட நிலையில் காத்திருந்த நபர்கள் 11மணியளவில் இருந்து குறிப்பாக 11:30 மணி மட்டும் நடத்தினரிடம் 0766974139எனும் தொலைபேசி அழைப்பு மூலம் தமது வருகைக்கான காத்திருப்பை உறுதி செய்து உள்ளனர்

அதன் தொடர்ச்சியாக 11:45 மணியளவில் குறிப்பிட்ட பிரதேசத்தை கடந்து அதிக வேகத்தில் கடந்த பேரூந்தை கவணிக்க பாதிக்கப்பட்ட நபர்கள் உடனடியாக நடத்தினரிடம் தொலைபேசி அழைப்பு எடுக்க முயன்ற போது நடத்துனரிடம் இருந்து குறிப்பாக 30 நிமிடங்கள் எந்த வித பதிலும் கிடைக்கவில்லை

அதன் தொடர்ச்சியாக சிறிது நேரத்தின் பின் பாதிக்கப்பட்ட நபர்களிடம் நடத்துனர் தொடபு கொண்டு தமது பேரூந்தானது குறிப்பிட்ட இடத்தை கடந்து 10KM ற்கு அப்பால் சென்று விட்டது எப்படியாவது தாம் காத்திருக்கிறேம் வருகை தந்து உமது பயணத்தை தொடரும் மாறு கூறப்பட்டது ஆனால் பேரூந்தானது குறிப்பிட்ட இடத்தை கடப்பதற்கு முன் பல முறை நடத்தினரிடம் தொலைபேசி அழைப்பு மூலம் தொடர்பு கொண்டமை குறிப்பிடத்தக்கது

பின் குறித்த பேரூந்தில் வருகை தந்த தமது நண்பர் ஒருவரை தொடர்பு கொண்டு தமது நிலமை தொடர்பாக கூறிய போது குறித்த நண்பர் குறித்த மூன்று முன் பதிவு செய்த ஆசனங்களில் கொழும்பில் இருந்தே பயணிகள் நடத்துனரால் அமர வைத்து வரப்பட்டது என தெரிவிக்கப்பட்டது

அதன் பின்னரே இது நடத்துனர் மற்றும் சாரதி என்பவரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி மற்றும் தமது சொந்த தேவைக்காக பணத்தை சேமிக்கவே இந்த செயல் இடம்பெற்றது என தெரிய வந்தது

இதன் தொடர்ச்சியாக இலங்கை போக்குவரத்து சபை பெறுப்பதிகாரியிடம் பாதிக்கப்பட்ட நபர்கள் தொடர்பு கொண்ட போது அவர்கள் பெருப்பு இல்லாமல் பதிலளித்துள்ளனர்

இவ்வாறான பெருப்பில்லாத செயற்பாடுகள் அன்மை காலமாக தொடர்ந்து நடை பெற்று வருகின்றன இவ்வாறான செயற்பாடுகள் இனி வரும் காலங்களில் இடம் பெற கூடாது எனவும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் நடத்துனர் மற்றும் சாரதி என்போர் முறையாக தண்டிக்கப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட நபர்கள் தமது ஆதங்கத்தை தெரிவித்துள்ளதோடு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் இலாப நோக்கோடு தமது பணியை மேற்கொள்ளலாம் சேவை நோக்கோடு செயற்பட வேண்டும் என மக்கள் மத்தியில் எதிர் பார்க்கப்படுகிறது இதற்கு தற்போதைய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் மத்தியில் எதிர் பார்க்கப்படுகிறது

பாதிக்கப்பட்ட நபர்களின் தொடர்பு இலக்கம் 0766721783
0775450737

Recommended For You

About the Author: admin