சாவகச்சேரி கல்வயல் ஆயிலடி வீரகத்தி விநாயகர்(புலுட்டையன் பிள்ளையார்) ஆலயத்தின் ஏற்பாட்டில் 20.10.2025 திங்கட்கிழமை மாலை ஆலய வளாகத்தில் பரிசளிப்பு வைபவம் மற்றும் தீபாவளி நிகழ்வு ஆகியன இடம்பெற்றிருந்தன.
ஆயிலடி வீரகத்தி விநாயகர் அறநெறிப் பாடசாலை அதிபர் வி.மயூரன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக சிரேஷ்ட விரிவுரையாளரும்-அகில இலங்கை சைவப்புலவர் சங்கத் தலைவருமான சி.கா கமலநாதன் கலந்து சிறப்பித்திருந்தார்.
மேலும் சிறப்பு விருந்தினர்களாக சிரேஷ்ட விரிவுரையாளர் வேல் நந்தகுமார்,தொல்லியல் திணைக்கள மேலாய்வு உத்தியோகத்தர் கா.கைலைவாசன் மற்றும் சிவஸ்ரீ கிருபாகரக்குருக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
நிகழ்வில் விசேட அம்சங்களாக அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான பரிசளிப்பு,பண்பிழந்த தமிழ் கலாசாரம் எனும் தலைப்பிலான வில்லுப்பாட்டு ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.


