புதுக்குடியிருப்பு பிரதேச பண்பாட்டு கலாசாரப் பெருவிழா..!
முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்பு பிரதேச பண்பாட்டு கலாசாரப் பெருவிழா இன்றைய தினம் காலை 9.00 மணிக்கு புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் கலாசார அடையாளங்களை தாங்கிய 40 ஊர்திப் பவனிகளுடன் சிறப்பாக நடைபெற்றது.
குறித்த நிகழ்வானது புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் திரு.விஜயகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் கலந்துசிறப்பித்தார். அத்தோடு கௌரவ அதிதியாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.
இந்த நிகழ்வில் பிரதேச கலைஞர்களின் கலை ஆற்றுகைகள் இடம்பெற்றதுடன் விருந்தினர்களால் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் வட மத்திய மாகாணத்தின் பிரதிப் பிரதம செயலாளர் திரு.எஸ்.குணபாலன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் திரு.கரிகாலன், ஏனைய உத்தியோகத்தர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.


