கொழும்பு மாநகர சபை: இன்று முதல் 3 நாட்களுக்கு அனர்த்த அவசரகால நிலை அறிவிப்பு
கொழும்பு மாநகர சபை (CMC), இன்று (ஒக்டோபர் 16) முதல் ஒக்டோபர் 18, 2025 வரை அமுலாகும் வகையில் அவசரகால அனர்த்த பதில் நடவடிக்கைக் காலத்தை அறிவித்துள்ளது.
கொழும்பு மாநகர சபை தனது இணையத்தளத்தில், “ஒக்டோபர் 16 முதல் 18 வரை அறிவிக்கப்பட்டுள்ள அவசரகால அனர்த்த சூழ்நிலைக்கு பதிலளிக்கும் வகையில், கொழும்பு மாநகர சபை உங்களுக்கு உதவ முழுமையான தயார் நிலையில் உள்ளது” என்று தெரிவித்துள்ளது.
உள்ளூர்வாசிகள் தகவல்களைப் பெறுவதற்கும், அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிப்பதற்கும் கொழும்பு மாநகர சபை இரண்டு தொலைபேசி இலக்கங்களை அறிவித்துள்ளது:
தகவல்களுக்கு: 011-2422222
அவசரகால உதவிக்கு: 011-2686087

