இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய..!
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.
இன்று (16) அதிகாலை சிறிலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 191 என்ற விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று முதல் எதிர்வரும் 18ஆம் திகதிவரை அவர் இந்தியாவில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

