அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலின்படி, இலங்கைக் கடற்படையினர் தெற்குக் கடற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த 51 பொட்டலங்களில் பாரிய சட்டவிரோத போதைப்பொருட்களைக் கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பொட்டலங்களில் சுமார் 670 கிலோகிராம் ‘ஐஸ்’, 156 கிலோகிராம் ஹெராயின் (Heroin) மற்றும் சுமார் 12 கிலோகிராம் ஹஷிஸ் (Hashish) ஆகியவை அடங்கியிருந்தன.
மொத்தம் 839 கிலோகிராம் எடையுள்ள இந்த போதைப்பொருள் தொகுதி, மேலதிக விசாரணைகளுக்காக தங்காலை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த போதைப்பொருள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பதைக் கண்டறிய பொலிஸ் மற்றும் கடற்படை குழுக்கள் இணைந்து கூட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

