மாணவர்களை இலக்காகக் கொண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய நிகழ்ச்சித்திட்டம்..!
சுற்றுலாத்துறையூடாக மாணவர்களுக்கு தொழில் வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கும் நோக்குடன் யாழ் மாவட்ட செயலகத்தில்
“Hotel Operation Multitasker National Program” எனுன் தேசிய நிகழ்ச்சித்திட்டம் நடைபெற்றது.
வடக்கு கிழக்கு மாணவர்களை இலக்காகக் கொண்டு 20 ஆயிரம் தொழில்வாய்பை மாணவர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் குறித்த திட்டம் IKP நிறுவனத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்டது.
குறிப்பாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினூடாக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வு செய்யப்படு பயிற்சியளிக்கப்படவுள்ளது.
ஒவ்வொரு மாணவருக்கும் சுமார் 56 ஆயிரம் ரூபா நிதியை குறித்த திணைக்களம் வழங்கி குறித்த கற்கை நெறி முன்னெடுக்கப்படவுள்ளது.
இன்நிகழ்வில்
பிரதம விருந்தினராக
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் நிர்வாக இயக்குனர் Mr.CD களுஆராச்சியும்
சிறப்பு விருந்தினர்களாக யாழ் மாவட அரச அதிபர் எம். பிரதீபன், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் இயக்குனர் (சந்தைப்படுத்தல்) எம்.ஜி.எஸ்.எஸ். கித்சிறி ஆகியோர் கலந்து நிகழ்வை சிறப்பித்ததுடன் குறித்த நிகழ்வில் பிரதேச செயலர்கள், சுற்றுலா துறை கற்கை நெறியை தொடரவுள்ள மாணவர்கள் மற்றும் துறைசார் ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


