வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டர் சைக்கிள் பேரூந்து தரிப்பிடத்தில் மோதியதில் இளைஞன் உயிரிழப்பு.!

வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டர் சைக்கிள் பேரூந்து தரிப்பிடத்தில் மோதியதில் இளைஞன் உயிரிழப்பு.!

வவுனியா- இராசேந்திரம்குளம் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டர் சைக்கிள் விபத்துக் குள்ளானதில் இளைஞன் ஒருவர் #உயிரிழந்ததுடன், இருவர் காயமடைந்துள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

 

இன்று (06) பிற்பகல் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..

 

வவுனியா, இராசேந்திரகுளம் பகுதியில் இருந்து நெளுக்குளம் நோக்கி புத்தம் புதிய மோட்டர் சைக்கிள் ஒன்றில் 3 இளைஞர்கள் பயணித்துள்ளனர். குறித்த மோட்டர் சைக்கிள் இராசேந்திரகுளம் பாடசாலை முன்பாகவுள்ள பேரூந்து தரிப்பு நிலையத்துடன் கட்டுப்பாட்டை இழந்து சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

 

குறித்த விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் #உயிரிழந்ததுடன், இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலயில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

சம்பவத்தில் வவுனியா சாம்பல்தோட்டம் பகுதியைச் சேர்ந்த கோபால்ராஜ் நிலக்சன் (வயது 18) என்ற இளைஞன் #உயிரிழந்துள்ளார்.

 

சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

 

பாதுக்காப்பாகவும், போக்குவரத்து விதிமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை செலுத்துவதன் மூலம் விபத்துகளை குறைத்துக்கொள்ள முடியும்.

 

உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்..

Recommended For You

About the Author: admin