கட்டுநாயகா – அக்கரைப்பற்று பஸ் மீது லொறி மோதி நாரம்மலயில் கொடூர விபத்து, மூவர் பலி, பலர் காயம்..!
இன்று (05) அதிகாலை நாரம்மல – குருணாகல் வீதியின் நாரம்மல நகருக்கு அருகில் லொறி ஒன்று இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் ஒன்றுடன் மோதியதில் பெண் ஒருவர் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
குருணாகலில் இருந்து நாரம்மல நோக்கி பயணித்த குறித்த லொறி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் வலது பக்கமாகச் சென்று குறித்த பஸ்ஸுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கட்டுநாயக்கவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த இ.போ.ச. பஸ்ஸுடனேயே இந்த லொறி மோதியுள்ளது.
இவ்விபத்தில் லொறியின் சாரதி, 2 பெண்கள் மற்றும் இரண்டு சிறுமிகள் உள்ளிடட 6 பேர் காயமடைந்த நிலையில் நாரம்மல மற்றும் குருணாகல் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது லொறியின் சாரதி, ஒரு ஆண், ஒரு பெண் ஆகிய மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் பொலன்னறுவையில வசிக்கும் 41, 80, 82 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
லொறியில் பயணித்த 40 வயதுடைய பெண், 16, 09 வயதுகளுடைய 2 சிறுமிகள் குருணாகல் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மரணித்தவர்களின் சடலங்கள் நாரம்மல, குருணாகல் வைத்தியசாலைகளின் பிரேத அறைகளில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


