அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிக்கும் அனைவருக்கும் இருக்கைப் பட்டி கட்டாயம்
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாகனங்களின் ஓட்டுநர்கள் மற்றும் அனைத்துப் பயணிகளும் இருக்கைப் பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவிப்பின்படி, ஒரு அதிவேக நெடுஞ்சாலையில் ஓட்டப்படும் அல்லது பயன்படுத்தப்படும் மோட்டார் வாகனத்தின் ஓட்டுநரும், அதில் பயணம் செய்யும் இருக்கையில் உள்ள ஒவ்வொரு பயணியும் தனிப்பட்ட பாதுகாப்பு இருக்கைப் பட்டியை அணிய வேண்டும்.
மேலும், ஒரு மோட்டார் வாகனத்தில் ஓட்டுநர், ஒவ்வொரு பயணி, மற்றும் இருக்கையில் உள்ள தனிநபர்கள் அனைவரும் அணியக்கூடிய தனிப்பட்ட பாதுகாப்பு இருக்கைப் பட்டிகள் பொருத்தப்படாதிருந்தால், அந்த மோட்டார் வாகனத்தின் ஓட்டுநர் அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழையவோ, வாகனத்தை ஓட்டவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

