இசைத்துறைத் தலைவர் ரெபேர்ட் புதிய பீடாதிபதியாகத் தெரிவு.!

இசைத்துறைத் தலைவர் ரெபேர்ட் புதிய பீடாதிபதியாகத் தெரிவு.!

சேர் பொன்னம்பலம் இராமநாதன் ஆற்றுகை மற்றும் காண்பியக் கலைகள் பீடத்தின் பீடாதிபதியாக இசைத் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான த.ரெபேர்ட் அருட்சேகரம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் பீடாதிபதி எஸ். சிவரூபனின் பதவிக்காலம் நிறைவுக்கு வருவதைத் தொடர்ந்து, புதிய பீடாதிபதியைத் தெரிவு செய்வதற்கான பீடச் சபைக் கூட்டம் இன்று வியாளக்கிழமை இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் இடம்பெற்ற தேர்தலில் தற்போதைய இசைத் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான த.ரெபேர்ட் அருட்சேகரம் பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.

இதனடிப்படையில் அடுத்துவரும் மூன்று ஆண்டுகளுக்கு த.ரெபேர்ட் அருட்சேகரம் பீடாதிபதியாகச் செயற்படுவார்.

Recommended For You

About the Author: admin