வீடமைப்பு அதிகார சபையினரால் வழங்கப்பட்ட வீடுகள் கையளிப்பு..!

வீடமைப்பு அதிகார சபையினரால் வழங்கப்பட்ட வீடுகள் கையளிப்பு..!

யாழ்ப்பாணம் மாவட்டம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் வீடமைப்பு அதிகார சபையால் வழங்கப்பட்ட ரூபா ஒரு மில்லியன் பெறுமதியான நான்கு வீடுகள் கையளிப்பு நிகழ்வு இன்று இடம் பெற்றுள்ளது.

குறித்த வீடுகள் கையளிப்பு நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், பிரதேச அமைப்பாளர் சாம் ஆகியோர் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு வீடுகளை நாடவெட்டி சம்பிர்தாயபூர்மாக திறந்துவைத்து பயனாளிகளிடம் கையளித்தனர்.

 

இதேவேளை இங்கு கருத்து தெரிவித்த அமைப்பாளர் சாம் அம்பன் கிழக்கின் பல வீதிகள் இன்னும் போடப்படாமலும் சீர் செய்யப்படாமலும் இருப்பதால் அவை தொடர்பில் கவனமெடுத்து அவற்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

இந்நிகழ்வில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக தலமை கிராம சேவகர் தோமஸ் யூட், கிராம சேவகர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

Recommended For You

About the Author: admin