மாயோன் இசைக்கல்லூரியின் வாத்திய நாத சங்கம நிகழ்வு..!
மாயோன் இசைக் கல்லூரி சமூகமானது நவராத்திரி காலத்தை முன்னிட்டு வாத்திய இசை அரங்க நிகழ்வு ஒன்றை எதிர்வரும் 05.10.2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு சாவகச்சேரி கலாசார மண்டபத்தில் முன்னெடுக்கவுள்ளது.
முற்றிலும் இலவசமான மேற்படி இசை அரங்க நிகழ்வை காண அனைவரையும் வருகை தருமாறும்-அதேநேரம் பிரதேச இசைத்துறையை வளர்க்க ஒத்துழைக்குமாறும் மாயோன் இசைக் கல்லூரி சமூகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

