மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு பிரதி அமைச்சர் விஜயம்..!

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு பிரதி அமைச்சர் விஜயம்..!

உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு பிரதி அமைச்சர் ரீ.பீ.சரத் அவர்கள் விஜயம் மேற்கொண்டு வீடுகளுக்கான சான்றிதழ்களை இன்று (02) வழங்கிவைத்தார்.

 

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான கந்தசாமி பிரபு அவர்களின் அழைப்பின் பெயரில் பிரதி அமைச்சர் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு பயனாளிகளுக்கான சான்றிதழ்களை வழங்கினார்.

 

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் எற்பாட்டில் மாவட்டத்தில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய வீடற்ற நபர்களுக்கு வீடுவழங்கப்பட்டதற்கான சான்றிதழ்கள் மற்றும் தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

 

அரசாங்கத்தினால் “சொந்தமாக இருக்க இடம் ஒரு அழகான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளின் கீழ் வீடமைப்பு திட்டங்கள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

 

இந்த வகையில் மாவட்டத்தில் இருவர் உள்ள குடும்பத்திற்கு வீடமைப்பதற்கான ஒன்பது இலட்சம் நிதியும், இருவருக்கு மேற்பட்ட அங்கத்தவர்களை உடைய குடும்பத்திற்கு பதினைந்து இலட்சம் நிதி வீடுகள் நீர்மாணித்து வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

மாவட்டத்தின் 13 பிரதேச செயலக பிரிவுகளில் ஒன்பது இலட்சத்திலான 79 வீட்டுத் திட்டங்களும் பதினைந்து இலட்சத்திலான 190 வீட்டுத் திட்டங்களும் மொத்தமாக 269 வீட்டுத் திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், பிரதம கணக்காளர் காயத்திரி ரமேஸ், கிழக்கு மாகாண ஆளுநரின் பிரத்தியோக செயலாளர் உமர்கத்தாப் அப்துல்லாஹ், பிரதேச செயலாளர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்களான ரீ. நிர்மலராஜ், எஸ்.முரளிதரன் மற்றும் உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

 

இதன் போது கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் தற்போதைய அரசாங்கமானது எழை எளியவர்களை வலுப்படுத்துவதற்கு தேவையான விடயங்களை மேற்கொண்டுவருவதுடன்

எதிர்வரும் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்ததுடன் மாவட்டத்தில் உள்ள வீடற்றவர்களுக்கான வீடுகள் வழங்குவதற்கு பாராளுமன்ற உறுபினர் கந்தசாமி பிரபு செயற்படுவதாக இதன் போது தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin