இறக்காமம் பிரதேசத்தில் இடம்பெற்ற சர்வதேச சிரேஷ்ட பிரஜைகள் தினம்..!

இறக்காமம் பிரதேசத்தில் இடம்பெற்ற சர்வதேச சிரேஷ்ட பிரஜைகள் தினம்..!

‘முதியோர்கள் தேசிய மற்றும் சர்வதேச நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்பவர்கள் : எமது அபிலாஷைகள் , நல்வாழ்வு மற்றும் உரிமைகள் எனும் கருப்பொருளின் கீழ் சர்வதேச சிரேஷ்ட பிரஜைகள் தினமானது நேற்று (01.10.2025) பிரதேச செயலாளர் ஜனாப்.M.S.M.ரஸ்ஸான் நளீமி அவர்களின் தலைமையில் இறக்காமம் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

 

இறக்காமம் பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் ஜனாப். A.அகமட் சபீர் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில்

உதவிப் பிரதேச செயலாளர் ஜனாபா A.K.றொஸின்தாஜ் , பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் , கணக்காளர் ஜனாப் , கிராம நிருவாக உத்தியோகத்தர் , அம்பாறை மாவட்ட செயலக மாவட்ட முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்களின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் , இறக்காமம் பிரதேச செயலக முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் , சமூக சேவைப்பிரிவின் பிரதான முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் , கிராம உத்தியோகத்தர்கள் , சமூக சேவைப்பிரிவின் உத்தியோகத்தர்கள் , பிரதேச செயலக பிரிவில் உள்ள சிரேஷ்ட பிரஜைகள் சங்க அங்கத்தவர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

 

அத்துடன் இந்நிகழ்வில் மாவட்ட முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோர்களால் முதியோர்களின் முக்கியத்துவம் பற்றியும் முதியோர்களும் இளைஞர்களையும் இணைத்து நிகழ்வுகள் இடம் பெறுவதாகவும் இத்தினங்கள் மட்டுமன்றி ஏனைய ஒவ்வொரு தினங்களிலும் முதியோர்களை பேண வேண்டும் எனவும் பாராட்ட வேண்டும் எனவும் முதியோர்கள் எங்களது பொக்கிஷம் எனவும் முதியோர்களை வீட்டுக்குள் முடக்கி வைக்காமல் அவர்களது திறமைகளை வெளிக்கொண்டு வரவேண்டும் எனவும் உரையாற்றினார்கள்.

 

இந்நிகழ்வில் சிரேஷ்ட பிரஜைகளின் பொல்லடி , பாடல் மற்றும் கலைநிகழ்சிளும் நடைபெற்றதுடன் தங்கள் முதுமை நிலையினை மறந்து மகிழ்ச்சியாக கொண்டாடினர். அத்துடன் 2024 ம் வருடத்திற்குரிய சிறந்த சமூக சேவையாளர் மற்றும் சிறந்த முதியோர் சங்கம் என்பன கௌரவிக்கப்பட்டதுடன் சிரேஷ்ட பிரஜைகள் சங்க அங்கத்தவரகள் மற்றும் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டது சிறப்பான அம்சமாகும்.

Recommended For You

About the Author: admin