நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு: ஒட்டோ டீசல், ஒக்டேன் 95 பெற்றோல் விலை ரூபாய் 6 குறைந்தது
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CEYPETCO) இன்று (செப்டம்பர் 30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை மீள்பரிசீலனை செய்து அறிவித்துள்ளது.
அதன்படி, ஒட்டோ டீசலின் விலை ரூ. 6 இனால் குறைக்கப்பட்டு ஒரு லீற்றர் ரூ. 277 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒக்டேன் 95 பெற்றோலின் விலையும் ரூ. 6 இனால் குறைக்கப்பட்டு ஒரு லீற்றர் ரூ. 335 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், மண்ணெண்ணெய் (Kerosene) விலை ரூ. 5 இனால் குறைக்கப்பட்டு ஒரு லீற்றர் ரூ. 180 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று CEYPETCO தெரிவித்துள்ளது.

