தலாவவில் கோர விபத்து: மூவர் பலி, நால்வர் காயம்
குருநாகல்–அனுராதபுரம் பிரதான வீதியில் தலாவவில் இன்று (செப்டம்பர் 25) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் லொறியும் வானும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மூவர் பலியாகியுள்ளதுடன், நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அனுராதபுரத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற வான், எதிர்த்திசையில் வந்த லொறியுடன் நேருக்கு நேர் மோதியது.
விபத்தில் காயமடைந்த சாரதிகள் இருவரும் தலாவ மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேனில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

