சாவகச்சேரி பிரதேசசபையில் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி..!
சாவகச்சேரிப் பிரதேசசபையின் மாதாந்த அமர்வு 25.09.2025 வியாழக்கிழமை சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றிருந்த நிலையில் தியாக தீபம் திலீபனின் உருவப்படம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
பிரதேசசபைத் தவிசாளர் பொ.குகதாசன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி அஞ்சலி நிகழ்வில் சபையின் உபதவிசாளர்,உறுப்பினர்கள் கலந்து கொண்டு தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
அத்துடன் திலீபனது இலட்சியக் கனவு நிறைவேற சபையில் இரு நிமிடங்கள் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


