சாவகச்சேரி நகரசபை உறுப்பினரின் கேவலமான செயல்..!
ஊடகவியலாளரால் பொலிசில் முறைப்பாடு.
சாவகச்சேரி நகரசபையின் உறுப்பினர் ஒருவர் தன்னை வழி மறித்து அச்சுறுத்தியதாக ஊடகவியலாளரும்-கோவிற்குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவருமான த.சுபேசன் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் 25.09.2025 வியாழக்கிழமை பிற்பகல் முறைப்பாடு செய்துள்ளார்.
கிராமத்தின் குள அபிவிருத்தி ஒன்று சார்ந்தே அவர் தன்னை அச்சுறுத்தியதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி குளத்திற்கு நகரசபையால் நிதி ஒதுக்கப்படாத போதிலும் கிராம அபிவிருத்திச்சங்கத் தலைவர் நிதி ஒதுக்கி இருப்பதாக கிராம மட்டத்தில் பொய்யான தகவல்களை வழங்கி வருவதாகக் கூறியே அவர் தன்னை அச்சுறுத்தி இருப்பதாகவும்-
இருப்பினும் மேற்படி நகரசபை உறுப்பினரே நகரசபையால் குளத்திற்கு 70இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக ஊடகங்களுக்கு கடந்த காலங்களில் கருத்துத் தெரிவித்திருப்பதாகவும் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் ஊடகவியலாளரும்-கிராம அபிவிருத்திச்சங்க தலைவருமான சுபேசன் தெரிவித்துள்ளார்.

