அர்க்கியா இஸ்ரேல் ஏர்லைன்ஸ்: டெல் அவிவிலிருந்து கொழும்புக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்

அர்க்கியா இஸ்ரேல் ஏர்லைன்ஸ்: டெல் அவிவிலிருந்து கொழும்புக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்

​இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டாரவின் கூற்றுப்படி, அர்க்கியா இஸ்ரேல் ஏர்லைன்ஸ் (Arkia Israel Airlines) நிறுவனம் டெல் அவிவிலிருந்து கொழும்புக்கு புதிய நேரடி விமான சேவைகளை ஆரம்பித்துள்ளது. இந்தச் சேவை இன்று செப்டெம்பர் 24ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

​தூதுவரின் அறிக்கையின்படி, அர்க்கியா ஏர்லைன்ஸ் விமானம் IZ 639 டெல் அவிவ் விமான நிலையத்திலிருந்து ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இரவு 18:30 மணிக்கு புறப்பட்டு, புதன்கிழமை காலை 06:15 மணிக்கு கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும்.

 

​மீண்டும் அங்கிருந்து விமானம் IZ 640, புதன்கிழமை இரவு 22:30 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்பட்டு, வியாழக்கிழமை காலை 05:35 மணிக்கு டெல் அவிவ் சென்றடையும்.

 

​ஓமான் மற்றும் மாலைதீவுகளின் வான்பரப்பில் இஸ்ரேலிய விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், இந்த விமானம் சீஷெல்ஸ் வழியாக இயக்கப்படும். இதனால், கொழும்பை வந்தடைய அண்ணளவாக 9 மணி நேரம் 15 நிமிடங்கள் ஆகும்.

 

​முக்கியமாக இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்ட இந்த விமானச் சேவை, வாரத்திற்கு ஒருமுறை இயக்கப்படும்.

Recommended For You

About the Author: admin