வடக்கில் இதுவரை காணத சம்பவங்கள் ஆளுநர் செயலகத்தில் நடக்கிறது.
கடந்த புலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளியை பார்க்கும் போது வடக்கின் மூன்று மாவட்டங்கள் யாழ்பாணத்தை விட வளர்ந்து விட்டன எனக் கூறுவதிலும் பார்க்க யாழ்ப்பாணம் பின்னோக்கி சென்று விட்டதே உண்மை.
வடமாகாண ஆளுநர் செயலகம் தேசிய மக்கள் சக்தியின் ஆசிரியர் சேவா சங்கத்திற்கு மட்டும் உரிய கலந்துரையாடலுக்கு உரிய இடமாக மாறிவிட்டது.
வடக்கில் ஆசிரியர்கள் அதிபர்கள் பிரச்சனை நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருப்பது உண்மைதான் அது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திலும் தொடர்கிறது.
தற்போது பிரதி அமைச்சர்களாக இருக்கும் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் ஜெயசிங்க ஆகியோர் ஜே வி பியின் ஆசிரியர் சேவா சங்கத்தின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் பதவிகளை வகித்தவர்கள் என நினைக்கிறேன்.
அக்காலப் பகுதியில் வடக்கில் இடம்பெறும் ஆசிரிய இடமாற்ற முறைகேடுகளுக்கு எதிராக போர்கொடி தூக்கியவர்கள் இன்று அதிகாரத்திற்கு வந்தபோது அதனை நடைமுறைப்படுத்தாது கூட்டங்கள் மட்டும் கூடுவது வேடிக்கையாக உள்ளது.
ஆளுநர் செயலகம் என்பது வடக்கில் உள்ள ஆசிரியர் அதிபர் சங்கங்கள் அனைத்தின் பிரச்சினைகளை அணுகும் பொதுவானதாக இருக்க வேண்டும்.
வடக்கை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த முன்னாள் ஆளுநர் சந்திரசிறி மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கூட ஆசிரியர் சங்கங்கள், போக்குவரத்து சபை மற்றும் மாவட்ட செயலகங்களில் பங்குதாரர்களை அழைக்கும் போது #கட்சி நிறம் பார்ப்பதில்லை.
ஆனால் போகாமல் விடுவது அவரவர் விருப்பம் ஆனால் அழைக்கவில்லை என கூற முடியாது.
வடக்கில் 4 ஆளுநர்கள் காலத்தில் நான் ஊடக சந்திப்புகளுக்கு சென்றிருக்கிறேன் சங்கங்களை அழைக்கும் போது கட்சி சார்ந்த சங்கங்களை மட்டும் அழைத்து கூட்டங்கள் நடத்தியதை பார்த்ததில்லை.
நீங்கள் சில வேளை கேட்கலாம் கூட்டத்தில் அடுத்த தீர்மானத்தை தாண்டி சில முடிவுகள் நடைமுறைப்படுத்தப்பட்டது என கூறலாம்.
அவர்கள் முடிவை எடுத்து விட்டு தான் கூட்டத்திற்கு அழைப்பு விடுவார்கள் அவர்களின் ஸ்டைல் அது.
முதல் நாளே முடிவுகளை சம்பந்தப்பட்டவர்களுடன் தொலைபேசியில் கதைத்து விட்டு முடிவுகளை இரவோடு இரவாக எடுத்து விடுவார்கள் ஆனால் சம்பிரதாயத்துக்கு கூட்டம் ஒன்றுக்கு எல்லோருக்கும் அழைப்பு விடுவார்கள்.
அது ஒரு விதத்தில் நிர்வாக கட்டமைப்பை சரியாக கொண்டு செல்லும் ஒரு தந்திரோபாயமாகவே பார்க்கக் கூடியதாக இருக்கும் ஏனெனில் வடக்கு கல்வி அவர்கள் காலத்தில் வினைதிறனாக செயற்பட்டதை யாரும் #மறுக்க முடியாது.
வடக்கு கல்வி கடந்த பரீட்சை பெறுபேறுககளின் அடிப்படையில் எத்தனையாவது இடம் என்பது அநேகமானவர்களுக்கு நன்கு தெரியும்.
அதேபோல் புலமைப்பரிசில் பரீடசையில் வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் பின்னோக்கி இருப்பது பலருக்கு தெரியாது .
இம்முறை யாழ்ப்பாணத்துக்கு வழங்கப்பட்ட வெட்டுப்புள்ளி 132 மன்னர், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவை எடுத்துக் கொண்டால் கடந்த வருடங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நிலைமை விளங்கும்.
அனேகமாக யாழ்ப்பாணம் தவிர்ந்த நான்கு மாவட்டங்களுக்கு புலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் இரண்டு புள்ளிகள் ஏனும் குறைவாக இருக்கும்.
ஆனால் இம்முறை யாழ்ப்பாணம் 132 ,முல்லைத்தீவு தீவு , கிளிநொச்சி 132, வவுனியா 132, மன்னார் 131. இந்த நிலை யாழ்ப்பாணத்தில் ஆரம்ப கல்வியின் வீழ்ச்சியையே காட்டுகிறது.
ஆசிரியர் வளம், பௌதீகவளம் மற்றும் பொருளாதார ரீதியாக அனைத்து கட்டமைப்புகளும் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் அதீத வளர்ச்சியில் காணப்படுகிற யாழ்ப்பாணம் ஏனைய மாவட்டங்களுடன் சரி சமமான வெட்டு புள்ளி கிடைக்கப்பெற்றிருப்பது ஆரம்பக் கல்வியின் ஆபத்தான விடயத்தை உணர்த்துகிறது.
இதை ஏன் கூறுகிறேன் என்றால் ஆசிரியர் சேவா சங்கத்தை மட்டும் அழைத்து அமைச்சர்களோ, பிரதி அமைச்சர்களோ ஆளுநரோ கலந்துரையாடுவதால் பிரச்சனை தீரப் போவதில்லை மேலும் பிரச்சனை வளர்ந்து கொண்டே செல்லும்.
சரி அதிகாரத்தில் நாங்கள் இருக்கிறோம் செய்வோம் என்றால் ஒரு வருடம் கடந்தும் வடக்கு மாகாணத்தில் சரியான ஒரு ஆசிரியர் இடமாற்ற கொள்கையை கூட நடைமுறைப்படுத்தாது இருப்பது யாருடைய தவறு?
வெளி மாகாணங்கள் ஆறு வருடங்களுக்கு மேல் செய்தவர்கள் வடக்கில் மீண்டும் கஷ்டப் பிரதேசங்களுக்கு அனுப்பப்படுவது யாருடைய தவறு?
பதில் கடமை என்ற போர்வையில் சென்றவர்கள் கடமை திகதி முடிந்து மூன்று வருடங்கள் ஆகியும் அதே பாடசாலையில் பணியாற்றுவது யாருடைய தவறு?
கடந்த காலங்களில் சில ஆசிரியர்கள் அதிபர்கள் நியமனங்கள் அரசியல் நீதியாக செய்யப்பட்டவை என கூக்கிரலிட்டவர்கள் தற்போது அதே தவறை செய்வது யாருடைய தவறு?
யாராவது எதிர் கருத்து உள்ளவர்கள் கருத்துக்களை பதிவிடலாம் அடிப்படை அறிவு இல்லாத தோழர்கள் தயவுசெய்து பதிவிடாதீர்கள்.!!!!
ஏனெனில் எனது முகநூல் பக்கத்தில் சில தோழர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள் அவர்கள் பல கட்சிக்கு சம்பளத்துக்கு நோட்டீஸ் ஒட்டியவர்கள் தற்போது தேசிய மக்கள் சக்தி நாங்கள் தான் என ஓடி வருவார்கள்


