மட்டக்களப்பு வைத்தியசாலையில் நோயாளிகள் படும் அவலம்..!

மட்டக்களப்பு வைத்தியசாலையில் நோயாளிகள் படும் அவலம்..!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கிளினிக் செல்லும் நோயாளிகள் இருக்கை வசதிகள் இல்லாததால் நோயாளிகள் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாக கூறப்படுகின்றது.

வைத்தியசாலையின் 34 ம் விடுதியில் கிளினிக் செல்லும் நோயாளிகளுடன் வரும் உதவியாளர்கள் மற்றும் உறவுகள் இருப்பதற்கு அங்கு இருக்கைகள் இல்லை என நோயாளிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இதன் காரணமாக மூன்று மணித்தியாலங்கள் நிற்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதா கூறப்படுகின்றது. கிளினிக் செல்லும் வயோதிபர்களும் இதனால் பெரும் அவதிக்குள்ளாவதாகவும் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin