இப்படி கூடவா நடக்கும் பெரும் சோகம்!!!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி திரில் வெற்றி பெற்ற நிலையில், ஒரு துயர சம்பவம் நிகழ்ந்திருக்கின்றது.
ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது 20வது ஓவரை இலங்கை அணியின் இளம் வீரர் வெல்லாலகே வீசினார்.
அப்போது அந்த ஓவரை எதிர்கொண்ட முகமது நபி தொடர்ந்து 5 சிக்சர்களை விளாசி அசத்தினார். இதன் மூலம் அந்த ஓவரில் 32 ரன்கள் கொடுக்கப்பட்டது. எனினும் இந்த போட்டியை இலங்கையில் தொலைக்காட்சியில் கண்டு களித்த வெல்லாலகேவின் தந்தை சுரங்கா வெல்லாலகே, தனது மகனின் இந்த பந்துவீச்சை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இது தனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு பாதிக்கும் என கவலை அடைந்த வெள்ளாலகே மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கின்றார். இதற்கிடையில் இது தெரியாமல் போட்டி தொடர்ந்து இருக்கிறது. இறுதியில் இலங்கை அணி 18.4 வெற்றி இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.
அப்போது வெல்லாலகே தந்தை உயிரிழந்தது இலங்கை கிரிக்கெட் அணி நிர்வாகத்திற்கு தெரிய வந்திருக்கிறது. உடனே வெல்லாலகே மைதானத்தில் இருந்து அழைத்து வந்த மேலாளர், இந்த சோக செய்தியை தெரிவித்து இருக்கிறார் உடனே செய்வதறியாமல் அதிர்ச்சியில் வெல்லாலகே உறைந்து இருக்கிறார். இதனை எடுத்து வெல்லாலேகிற்கு கண்ணீர் சிந்த மைதானத்தை விட்டு வெளியே வந்துள்ளார்.
இதன் அடுத்து இலங்கை வீரர்கள் அவருக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அவரை கட்டி அணைத்து ஆறுதல் கூறியுள்ளனர். இதை எடுத்து வெல்லாலகே, உடனடியாக இலங்கைக்கு செல்ல உள்ளார். வெல்லாலகேவின் தனிப்பட்ட இழப்பு கிரிக்கெட் ரசிகர்களையும் சக வீரர்களையும் அதிர்ச்சியில் உள்ளாக்கியுள்ளது. தனது மகன் ஐந்து சிக்சர்கள் கொடுத்த அதிர்ச்சியை கண்டு தந்தை உயிரிழந்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

