ராஜபக்ஷ குடும்பத்தினரை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது..!

ராஜபக்ஷ குடும்பத்தினரை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது..!

மஹிந்த, கோட்டாபய, பஸில், சமல், நாமல் என ராஜபக்ஷ குடும்பத்தினர் பெரும் குற்றவாளிகள். அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பவே முடியாது. உரிய தண்டனைகளை அவர்கள் அனுபவித்தே தீருவார்கள் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

 

விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அரச இல்லத்தில் இருந்து வெளியேற மாட்டேன் என்று அடம்பிடித்த மஹிந்த ராஜபக்ஷவை நாட்டின் சட்டம் அங்கிருந்து வெளியேற்றியுள்ளது.

 

இப்போது அவர் தங்காலையில் இருந்து கொண்டு அரசியல் இலாபம் தேடும் வகையில் அழுது புலம்பியவாறு அறிக்கை விடுகின்றார்.

 

குடும்ப ஆட்சி நடத்தி இந்த நாட்டை அழித்த ராஜபக்ஷ குடும்பத்தினரை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது. பெரும் குற்றவாளிகளான அவர்கள், சட்டத்தின் பிடியில் இருந்து தப்பவே முடியாது. உரிய தண்டனைகளை அவர்கள் அனுபவித்தே தீருவார்கள் என மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin