விசேட சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் நிமலரஞ்சன் காலமானார்..!

மட்டக்களப்பில் பலரின் உயிர்களை காப்பாற்றிய விசேட சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் நிமலரஞ்சன் காலமானார்..!

மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் கடந்த பல வருட காலமாக விசேட சத்திர சிகிச்சை நிபுணராக கடமை புரிந்து வந்த வைத்தியர் T. நிமலரஞ்சன் அவர்கள் திடீர் உடல்நல குறைவினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் இயற்கை எய்தினார் .

 

திருகோணமலையை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பினை வசிப்பிடமாகவும் கொண்டு பல வருடங்களாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அற்பணிப்பான சேவையினை புரிந்த இவர் அனைவருடனும் அன்பாக பழகும் சுபாவம் உடையவராக காணப்பட்டார். மட்டக்களப்பு மக்களினதும் போதனா வைத்தியசாலை சமுகத்தினதும் நன்மதிப்பை பெற்ற ஒருவராக திகழ்ந்த இவரது இழப்பு அனைவரையும் கவலை கொள்ளச் செய்துள்ளது

 

தனது வைத்தியத் திறமையினால் நோயாளிகள் இன்றும் உயிருடன் வாழ வழி செய்த வைத்தியரின் இழப்பு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மட்டுமல்ல முழு நாட்டுக்கும் பேரிழப்பாக பார்க்கப்படுகிறது.

 

அன்னாரின் இழப்புக்கு மட்டக்களப்பு மக்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் அவர் ஆற்றிய சேவை அவரது ஆத்மாவை நிச்சயம் இறைவன் திருப்பாதம் சேர்க்கும்.

Recommended For You

About the Author: admin