ஏமன் நாட்டின் தலைநகர் சனா உட்பட பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் 35 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 130 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஹவுதி சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் ஏமன் நாட்டில் உள்ள இராணுவ தலைமையக கட்டடம் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


