எல்ல விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு சாவகச்சேரி நகரசபையில் அஞ்சலி..!

எல்ல விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு சாவகச்சேரி நகரசபையில் அஞ்சலி..!

கடந்த வாரம் பதுளை-எல்ல வனப்பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக சாவகச்சேரி நகரசபை அமர்வில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

10/09 புதன்கிழமை சாவகச்சேரி நகரசபையில் இடம்பெற்ற நான்காவது அமர்வின் போதே சபை உறுப்பினர் யோகநாதனின் வேண்டுகோளிற்கு அமைவாக சபையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அஞ்சலி நிகழ்வானது நகரசபைத் தவிசாளர் ஸ்ரீபிரகாஷ் தலைமையில் உறுப்பினர்களுடைய பங்குபற்றுதலோடு இடம்பெற்றிருந்தது.

 

எல்ல விபத்தில் 15பேர் பலியாகியிருப்பதுடன்-பலர் படுகாயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin