திருவாசக முற்றோதலில் உலக சாதனை பெற்ற பெண்ணிற்கு கலாம் உலக சாதனை விருது..!
தென்மராட்சி மட்டுவில் கிராமத்தில் 07.09.2025 ஞாயிற்றுக்கிழமை திருவாசக முற்றோதலில் உலக சாதனை படைத்த பெண்ணிற்கு கலாம் உலக சாதனைப் புத்தகம் விருது வழங்கும் நிகழ்வு 07/09 ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு மட்டுவில் கலுவம் சிவன் ஆலயத்தில் இடம்பெறவுள்ளது.
வைத்தியக்கலாநிதி மகேஸ்வரி நன்னித்தம்பி அவர்களால் 2மணித்தியாலங்கள் 40நிமிடங்களில் திருவாசகம் பாடி மேற்படி உலக சாதனை படைக்கப்பட்டுள்ள நிலையில் அவருடைய சாதனையை கலாம் உலக சாதனைப் புத்தகம் தனது புத்தகத்தில் பதிவு செய்து கலாம் உலக சாதனை விருது வழங்கிக் கௌரவிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வசுந்துரா கதிர்காமர் தலைமையில் இடம்பெறவுள்ள மேற்படி உலக சாதனை விருது வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா கலந்து சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

