யாழில் சிவகுரு ஆதீனத்தில் வள்ளிக்கும்மி ஆற்றுகை நிகழ்வு..!
உலக சிவனடியார்கள் திருக்கூட்டத்தினரின் ஈழத்திற்கான பயணத்தின் ஓர் அங்கமாக வள்ளிக்கும்மி அரங்கேற்ற நிகழ்வு நல்லூர் சிவகுரு ஆதீன வளாகத்தில் 2025.09.04 வியாழக்கிழமை அன்று மாலை 4.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. தமிழகத்தில் இருந்து வருகைதரும் 65 கலைஞர்கள் குறித்த ஆற்றுகை நிகழ்வில் பங்கெடுக்கவுள்ளனர்.
வள்ளிக்கும்மி என்பது முருகப்பெருமான் மற்றும் வள்ளி ஆகியோரின் வாழ்க்கையை, குறிப்பாக வள்ளியின் பிறப்பு முதல் திருமணம் வரையிலான காலகட்டத்தில் பாடி, கும்மியடித்து ஆடும் ஒரு நாட்டுப்புறக் கலை ஆகும். தமிழகத்தின் கொங்கு மண்டலத்தில் தனிச்சிறப்பாக இவ் கும்மி ஆட்டம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

